6 Nov 2025

உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு றொட்ரிக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வாகனப் பேரணி.

SHARE

உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு றொட்ரிக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வாகனப் பேரணி.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு றொட்ரிக்  கழகத்தின் (Rotary club) ஏற்பாட்டில் சர்வதேச போலியோ தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனப் பேரணி புதன்கிழமை(05.11.2025) நடைபெற்றது. 

களுதாவளையிலிருந்து ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வு வாகனப் பேரணி கோயில்போரதீவு வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வினை பட்டிருப்பு றொட்ரிக் கழகம், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, போரதீவு பற்று பிரதேச சபை, பிரதேச செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, பிரதேச செயலகம், விளையாட்டு கழகங்கள், பிரதேச மட்ட பொதுஅமைப்புக்கள், என்பன பலரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது அதிகாரிகள், அரசியல்வாதிகள், வைத்தியர்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: