2 Oct 2018

சிறார்களை தைரியத்துடன் வாழ்வதற்காக அவர்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.

SHARE
(நவா)

மிகவும் சவால்கள் மிகுந்த பிரதேசமான போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திலே இவ்வாறான சிறந்த சஞ்சிகைகள் கூடிய இந்த நிகழ்வை எங்களுக்கு அளித்தற்காக ஏற்பாட்டுக்குழு மலர்குழு அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
குறிப்பாக சர்வதேச சிறுவர் தினத்தை முன்னீடான இன்றைய தொனிப்பொருளிலே மாணவர்களை அல்லது சிறார்களை தைரியத்துடன் வாழ்வதற்காக அவர்களை வலுப்படுத்தபட வேண்டிய
அவசியம் உணரப்பட்டுள்ளது. இங்கு நூல்நயவுரையாற்றிய கவிஞன் மற்றும்  பேச்சை வழங்கிச் சென்ற உயர்தர மாணவன் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் அவர்களை மேம்படுத்துகின்றன. செற்பாடு அவற்றுக்கும் அப்பால் சிறுவாகளை  மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. நாங்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் சமூகமட்ட நிறுவனங்கள் அனைவரும் உங்களுக்காக கரங்கோர்க்க  காத்திருக்கின்ற இவ்வேளையிலே தைரியத்துடனும் சவால்களை முகங்கொண்டு வாழ்கின்றவர்களாக உருவாக வேண்டிய அவசியம் இருக்கின்றது. இக்கால கட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலே முகம் கொடுத்து வாழும்போது மனச்சஞ்சலங்களால் பல்வேறு முடிவுகளை எடுக்கின்றவர்களாக சிறுவர்கள் இருக்கின்றார்கள்.

என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார்.சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் பிரிவும், சமூக சேவைப் பிரிவு மற்றும் சமுர்த்திப் பிரிவும் இணைந்து ஒக்டோபர் 01 பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி; தலைமையில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் நிகழ்வு நடைபெற்றது.

இது சர்வதேச சிறுவர் தினம், மற்றும் முதியோர் வாரத்தை  முன்னிட்டு “தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்” “மனித உரிமைகளுக்காக முன்னின்ற மூத்த பிரஜைகளை கௌரவிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதியோர்களை கௌரவித்தல் பரிசில்கள் வழங்குதல் பசுந்தளிர் நூல் வெளியீடு என்பன இடம்பெற்றதோடு, கலைநிகழ்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்….

ஆகவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் இன்றைய தினம் சபதம்பூண வேண்டும். எங்களுக்குள் நாங்கள் தன்னம்பிக்கை தைரியத்தையும் அதனை வளர்த்துக்கொண்டு சிறந்த சிறுவர்களாக இந்த நாட்டுக்கு உரம் சேப்பவர்களாக மிளிரவேண்டியது ஒரு அத்திவசிய தேவையாக இருக்கிறது.

மனித மனப்பாங்குகள் பொங்கி வருகின்ற இக்காலகட்டத்தில் இங்கு முதுசங்களாக இருக்கின்ற முதியவர்களை பேணி பாதுகாத்து அவர்களிடமிருந்து நல்லவைகளை பெற்றுக்கொள்கின்ற ஒரு சமூதாயமாக இச்சிறுவர் சமூதாயம் மாறவேண்டும். பாடசாலை இடைவிலகல் சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் போன்ற பல்வேறு சவால்களை பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற இன்றைய சிறுவர்கள் மாணவர்கள் அனைத்தையும் வென்றவர்களாக இப்பிரதேசத்திற்குரிய மண்ணுக்குரிய வழங்களை சிறந்த முறையில் பெற்று பயன்பட வேண்டும். என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலாளர் எஸ்.புவனேந்திரன், கணக்காளர்  எஸ்.நாகேஸ்வரன், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் களுவாஞ்சிகுடி சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி வரதராஜன் போரதீவுப்பற்று அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி மோகனதாஸ் கோட்டைக்கல்வி பணிப்பாளர் அருள்ராஜா பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் முதியோர்கள் பாடசாலை மாணவர்கள் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: