கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு புதன்கிழமை(05.11.2025) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாசார உத்தியோகத்தர் வ.பற்பராசாவின் ஒழுங்கமைப்பில், இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை சபையோர் முன்னிலையில் வெளிப்படுத்தினர்.
அந்த வகையில் நாட்டார் பாடல்கள் மற்றும், கிராமிய விளையாட்டுக்கள் தொடர்பாக ஒய்வுநிலை அதிபரும், எழுத்தாளருமாகிய நா. நாகேந்திரன், பறை மேளக்கலை தொடர்பாக கலைஞர் கந்தன் பேரின்பநாயகம், பரதக்கலை தொடர்பாக ஒய்வுநிலை நடன பாட ஆசிரிய ஆலோசகர் வனிதா தனசேகரன், சிறுகதை தொடர்பாக சிறுகதை எழுத்தாளர் புஸ்பா இராசையா, மிருதங்க கலை தொடர்பாக கலைஞர் த.லுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கலைதுறை தொடர்பாக விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்
சத்யகௌரி தரணிதரன், பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்,
கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment