பிரச்சினைகளை என்னிடம் கூறுங்கள் முகநூலில்
எனக்கு சேறு பூசி ஒன்றும் நடக்காது – பிரதேச சபை தவிசாளர் வினோராஜ்.
பிரச்சினைகளை என்னிடம் கூறுங்கள் முகநூலில் எனக்கு சேறு பூசி ஒன்றும் நடக்காது என்னுடைய மக்களுக்கான பணி தொடரும் பொய்கள் கொஞ்ச நாளைக்குத்தான் உண்மைகள் வெல்லும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (04.11.2025) களுதாவளை பொது நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது குறித்த பிர தேச சபையின் உறுப்பினர்களான ஆ.அரவிந்தன், யோ.சந்திரகுமார், மற்றும் திருமதி.த.தர்சிகா, சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் குகநேசன், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட விசேட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தினால் சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர்….
ஆரச நிதியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். களுதாவளை பொது நூலகத்தின் குறைபாடுகளை நாங்கள் பெற்றுள்ளோம். பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட வேண்டும் முகப்புத்தகங்களிலும் வட்ஸ்அப் குழுக்களிலும் தவறாக எழுதுவதனால் ஒன்றும் செய்ய முடியாது.
எமது பிரதேச சபை என்றும் பிரதேச மக்களுக்கு சேவை செய்து வருகின்றது. இலங்கையிலே அதிகூடியமான வீதி மின் விளக்குகளை நாங்கள் பொருத்தியிருப்போம் என நாம் நம்புகின்றோம். கடந்த 12.02.2025 அன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியதற்கு முன்பு பிரதான வீதியில் 150 இற்கு உட்பட்ட மின்விளக்குகள்தான் இருந்தன இப்போது அதனைவிடவும், அதிகளவு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அனத்தும் இரவில் ஒளிர்கின்றன. இவை அனைத்தும் பிரதேச சபையின் பெறப்பட்ட நிதியில் பெறப்பட்டவை அல்ல. எனது தனிப்பட்ட முயற்சியினால் தனவந்தர்களிடம் இருந்து புறப்பட்ட நிதியை கொண்டு இந்த மின்விளக்குகளை நாம் பொருத்தி இருக்கின்றேன்.
மக்கள் எமக்குத் தரும் கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். கட்சி பேதங்களை மறந்து நாம் வேலை செய்ய வேண்டும். எந்தவித சமூக வலைத்தளங்களிலும் வட்ஸ்அப் குழுக்களிலும் விமர்சனங்கள் வந்தாலும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருப்போம். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 Comments:
Post a Comment