தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் நடைபெறும் சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு பிரதேசங்கள் சார்ந்த அமைப்புகளுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அவை தொடர்பில் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் சிறந்ததொரு வாய்ப்பென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment