தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியின்றி தெரிவானார் சந்திரசேகரன் சந்திரமோகன்.
மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு பொதுக் கூட்டம் மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு பொதுக் கூட்டம் 2026.01.19 அன்று கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இம்முறை அதிகாரசபையின் பல பதவிகளுக்கும் பலத்த போட்டி காணப்பட்டது. இந்த நிர்வாகத் தெரிவு பொதுக் கூட்டத்தில் தலைவராக எஸ்.சந்திரமோகனும், செயலாளராக திரேஷ்குமாரனும், பொருளாளராக மகாலிங்கமும், உப தலைவராக எம்.எல்.எம்..சித்திக், உப செயலாளராக கோதாசனும், தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது செயளாலருக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது, தலைவருக்கு போட்டியின்றி மீண்டும் வந்தாறுமூலை கமநலசேவை நிலையத்தின் தலைவர் சந்திரமோகன் மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment