22 Apr 2018

அரசு பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிட்டால் இன்னும் அதிக பாடத்தை இந்த அரசுக்கு மக்கள் கற்பிப்பார்கள். எச்சரிக்கிறார் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்

SHARE
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இழுத்தடித்து வந்து கடைசியில் ஒருவாறு நடாத்தி முடித்து தோல்வியில் துவண்டு போயுள்ள கற்றுக் கொண்ட பாடத்தை அரசு மறந்தால் இன்னமும் இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் அரசை எச்சரித்துள்ளார்.
ஜனநாயக விழுமியங்களுக்கு அரசு மதிப்பளித்து மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 22.04.2018 அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நல்லாட்சி அரசை ஜனாதிபதி பொறுப்பெடுத்துக் கொண்டதும் அவரது  100 நாள் வேலைத் திட்டத்தினூடாக ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கப்படும் என பெருத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

ஆனால், அவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாதது ஒருபுறமிருக்க ஏற்கெனவே இருந்து வந்த ஜனநாயக முறைமைகள் கூட மங்கி மறையும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறின.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்து கடைசியில் மக்களின் அதிகரித்த வற்புறுத்தலின் பேரில் தேர்தல் நடாத்தப்பட்டது.

மக்களின் தீர்ப்புக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொண்டால் மக்கள் என்ன பி;ரதிபலிப்பை வெளியிடுவார்கள் என்பதை கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன.

எனவே, இந்தக் கற்றுக் கொண்ட பாடத்தை மறந்து விட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இழுத்தடித்ததைப் போன்று மாகாண சபைத் தேர்தலையும் அரசு பிற்போட நினைத்தால் மக்கள் அதற்கும் தக்க பதிலடி கொடுப்பார்கள். எனவே, நல்லாட்சி அரசுக்கு மக்கள் முன் முகம் கொடுக்க முடியாமல் போகலாம்.

ஆக, அத்தகையதொரு சூழ்நிலைக்கு மக்களை ஆளாக்காது ஜனநாயக விழுமியங்களை மதித்து அரசு உடனடியாக பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.

நல்லாட்சி என்று கூறுகின்ற இந்த அரசின் மீது மக்கள் படிப்பாக நம்பிக்கை இழக்கும் சூழ்நிலைக்கு இனவாதமும் இன்னபிற செயற்பாடுகளும் மாறிவிட்டிருக்கின்றன.

சமகாலத்திலும் எதிர்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்பும் குறுகிய, அண்மித்த மற்றும் நீண்ட காலத்திட்டங்கள் எதுவுமின்றி நல்லாட்சி அரசு தட்டுத் தடுமாறுகின்றது.

அரசின் இத்தகைய போக்கு நாட்டை ஸ்தம்பித்த நிலைக்கும், ஸ்திரமின்மைக்கும் குழப்பத்திற்கும் இட்டுச் செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: