22 Apr 2018

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 4 அடுக்குமாடி மாணவர் தங்கும் விடுதி திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிப்பு

SHARE
கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அங்கு கற்கும் மாணவர்களின் தங்கும் வசதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 04 மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 20.04.2018 இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக விடுதியைத் திறந்து மாணவர்களின் பாவனைக்காக பல்கலைக்கழக நிருவாகத்திடம் கையளித்தார்.
சுமார் 400 மாணவர்கள் தங்கியிருந்து தமது கல்வியை மேற்கொள்வதற்கு வசதியாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 215 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டிடம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவம், தொடர்பாடல், சித்த வைத்தியத்துறை மற்றும் கணினி, பிரயோக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மாணவர்கள் இங்கு தமது கற்கைகளை மேற்கொள்கின்றார்கள்.

கடந்த காலங்களில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமக்க விடுதி வசதி செய்து தருமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதி திறந்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வல்லிபுரம் கனகசிங்கம் உட்பட பல்கலைக் கழக நிருவாகத்தினர், விரிவுரையாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: