22 Apr 2018

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்

SHARE
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளும் திங்கட்கிழமை 23.04.2018 ஆரம்பமாவதாக அந்நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் திங்கட்கிழமை மீளத் துவங்கவுள்ளன.

அதன்படி, இசை, நடனம், நாடகமும் அரங்கியலும், மற்றும் கட்புலத்துறைக்கான இரண்டாம் அரையாண்டு கல்வி நடவடிக்கைகளுக்குரிய மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் காலதாமதமின்றி இணைந்து கொள்ளுமாறு நிருவாகம் கேட்டுக் கொள்கின்றது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக இடம்பெற்று வந்த பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: