1 Apr 2018

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி மன்றத்திற்கான சத்தியப்பிரமானம்

SHARE
நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சற்றுமுன்னர் கட்சியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முன்னிலையில் தமது சத்தியப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டனர்.
அந்தவகையில் மேற்படி நிகழ்வானது உத்தியோகபூர்வமான கல்லடி உப்போடை சன் ரைஸ் விடுதியில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் தேசிய பட்டியலில் தெரிவானவர்கள் அவர்களது குறித்த பிரதேச அமைப்பாளர்களாக கட்சி ரீதியாக நியமனங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: