1 Apr 2018

அம்பாறை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகளின் ஊடாக சந்திப்பு

SHARE
அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் ஊடாக சந்திப்பு காரைதீவு சண்முகா வித்தியாலய மண்டபத்தில் அதன் தலைவர் எம்.திலிபனின் தலைமையில் 31 ஆம் திகதி நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த தலைவர் எம்.திலிபன் வழங்கப்படவுள்ள நியமனங்கள் தொடர்பாக பட்டதாரிகள் அமைப்பின் கொள்கைகளுக்கு கலங்கம் ஏற்படுத்து வகையில் செயற்பட்ட கருப்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் சந்தர்ப்பத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் வாக்குறுதிகள் முற்றிலும் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் குறைவாகவே அமையும் என்கின்ற விடயத்தை முன்வைக்கின்றேன் அந்தவகையில் இதற்கான தகுந்த பிரதிபலனை எதிர்வாரும் காலங்களில் எமது போராட்ட நடவடிக்கைகளில் நாம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இங்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: