மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைசேர்ந்த பன்சேனை பாரிவித்தியாலம் பெண்கள் அணி கால்பந்தாட்ட விளையாட்டில் சாதனை படைத்துள்ளது. இலங்கை ரீதியாக “கிரீடா சக்தி “எனும் தொனாப்பொருளில் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலய காற்பந்தாட்ட அணியினர் பங்கு பற்றி இருந்தனர்.
இதன் மூலம் எமது அணியினர் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்தனர்.இதில் பங்கு கொண்ட வீரர்கள் 08 பேர் தேசிய அணிக்கான குழாமிற்கு தெரிவாகி வரலாற்றூச் சாதனை படைத்தனர்.இதில் சிறப்பாக விளையாடிய பா.வசந்தினி 08 கோல்களை போட்டு சாதனை நிகழ்த்தினார்.இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதியளித்து ஊக்கப்படுத்திய பாடசாலை அதிபர் திரு,செ,ஜமுனாகரன் அவர்களுக்கும்,மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவினருக்கும் எல்லாவற்றுக்கும் மேலான எம் மாணவச் செல்வங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுனர் ,மட்/மட்/பன்சேனை பாரி வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் பவளசிங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டுச்சுற்றுப்போட்டி கடந்த 27/03/2018 தொடக்கம் 30/03/2018 வரை -பொலன்னறுவ தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments:
Post a Comment