நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலில் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமின்றி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் வழக்குகளில் ஆஜராகாது புதன்கிழமை நீதிமன்றங்களை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பாக சட்டத்தரணிகள் தெரிவிக்கும்போது ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு வழமையாக ஆஜராகும் சுமார் 14 சட்டத்தரணிகளும் அதேபோல வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜராகும் சுமார் 8 சட்டத்தரணிகளும் புதன்கிழமை காலை 06.03.2018 நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பமானபோது குறித்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு அறிவித்து விட்டு வெளியேறினோம்.
புதன்கிழமை திகதி குறிக்கப்பட்ட எந்தவொரு வழக்குகளுக்கும் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.
சட்டத்தரணிகள் கலந்தோலோசனை செய்து புதன்கிழமை இடம்பெறும் வழக்குகளுக்கு ஆஜராவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டதின் அடிப்படையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினோம்.
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் நீதியில் பாரபட்சம் காட்டப்படுவதால் எமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.” என்றனர்.
0 Comments:
Post a Comment