அரசாங்க ஊழியர்கள் அரச சேவையில் நீடித்திருக்கக் கூடிய அதி உச்ச வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 60ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி எனக் குறிப்பிட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தினடிப்படையில் அரச ஊழியர்கள் முழு அளவில் ஓய்வு பெறக் கூடிய வயதெல்லை 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 67 ஆக அதிகரித்துள்ளது பற்றிய சுற்றுநிருபத் தகவல்கள் தற்போது பரவலாக வெளியாகிக் கொண்டிருக்கின்ற போதும் இன்னமும் அது தமது கைக்குக் கிட்டவில்லை என மட்டக்களப்பு திட்டமிடற்பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் திங்கட்கிழமை 05.03.2018 தெரிவித்தார்.
பணியிலிருந்து ஓய்வூதியம் பெறுவோரின் வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது, அந்த வகையில் ஸ்பெயினில் 65 வயதும் 3 மாதங்கள் எனவும், சுவிற்ஸர்லாந்தில் 65 எனவும், சுவீடனில் 67 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
0 Comments:
Post a Comment