சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு எதிர்வரும் காலங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருக்கின்றது என அவ்வமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளர்.
திங்கட் கிழமை (06) பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல சிறுவர் இல்லங்களில் பல தரப்பட்ட மாணவர்கள் தங்கி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே சிந்தனையுடன் கொண்டு செல்வதென்பது முடியாத காரியம்தான். ஆனால் அதையும் தாண்டி இவர்களை சமூகத்தில் நற்பிரஜைகளாக மாற்ற வேண்டும் என்பதில் அயராது பாடுபடும் பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். இவ்வாறான சமூக சிந்தனையாளர்களை போன்று ஏனைய இளைஞர்களும் முன்வர வேண்டும்.
இவ்வில்லம் பாராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளுடன் இயங்கி வருகின்றதை அறியக் கூடியதாக உள்ளது. அவற்றை ஒரேதடவையில் எமது அமைப்பால் செய்து தர முடியாவிட்டாலும் மிக விரைவாக இவ்வாறான இல்லங்களை இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பின் முழு அனுசரனையோடு நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சிறுவர் பராமரிப்புநிலையங்கள் வட கிழக்கில் பல உள்ளன. அவற்றை புலம்பெயர்ந்து வாழும் அமைப்புக்கள் மற்றும் பரோபகாரிகள் அனைவரும் இணைந்து உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment