மீள் குடியேற்ற அதிகார சபையின் தலைவர் என். பத்மநாதன் (வயது 70) ஞாயிற்றுக்கிழமை களுவோவிலயில் உள்ள வைத்தியசாலையில் காலமானார்.மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிழக்குப் பல்கலைக்கழக கவுன்ஸில் முன்னாள் உறுப்பினரும், திறைசேரியின் முன்னாள் பிரதிச் செயலாளரும், சுற்றுச்சூழல் அமைச்சின் முன்னாள் செயலாளரும், மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
இது போன்று இன்னும் பல பொது அமைப்புக்களின் முக்கிய பதவிகளையும் வகித்து அவர் பொதுத் தொண்டாற்றியுள்ளார்.
அன்னாரது இறுதிக் கிரிகைகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment