களுவாஞ்சிகுடியிலிருந்து இயங்கிவரும் சமூக அபிவிருத்தி நிலையத்தின் 18 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வொன்றை ஞாயிற்றுக் கிழமை (18) இடம்பெற்றது.
இதன்போது 40 பைன்ட் இரத்தம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கான விசேட வைத்திய நிபுணர், வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இத்ததானம் செய்தனர்.
18 வருட காலமாக இலவசக் கல்வியை அப்பகுதிவாழ் சிறார்களுக்கு எதுவித ஊதியமுமின்றி இந்த சமூக அபிவிருத்தி நிலையத்தி நிலையம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment