பாடசாலைமட்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் ஓர் பகுதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு விழிப்புணர்வு நாடகம், மற்றும் வினாவிடை ஆகிய போட்டிகளை கொழும்பு 05- சம்புத்தத்வ ஜெயந்தி மந்திரிய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடாத்தியது.இந்நிகழ்வில் கொழும்பு, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்ளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் கலந்து கொண்டிருந்தன. இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம் நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
இதில் சிறந்த நடிகருக்குமான பரிசினையும் வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலய மாணவன் அ.சதுபக்சலன் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இதன்போது நடைபெற்ற வினாவிடை போட்டியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட தாளங்குடா பாடசாலை இரண்டாமிடத்தையும் பெற்றுகொண்டதுடன் இவ்வினாவிடைப் போட்டியில் முதலாமிடத்தை குருநாகல் மாவட்ட பாடசாலை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல சிங்கள மாணவர்களின் போட்டிக்கு மத்தியில் மட்டக்களப்பிலிருந்து சென்ற தமிழ் மாணவர்கள் தேசிய ரீதியில் பங்கு கொண்டு நாடகப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment