பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையும், களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சாயி மற்றும் பாரதி பாலர் பாடசாலைகளும், இணைந்து நடாத்திய பொங்கல் விழாவும் சிறுவர் கணக்கு திறத்தல் நிகழ்வும் மேற்படி பாலர் பாடசாலைகளில் நடைபெற்றது.
இதில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் டப்ளியு.அதுள குமார மற்றும் மாவட்ட முகாமையாளர் வை.பி.அஷ்ரப் மற்றும் கிழக்கு மாகாண வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் மு.சத்தியநாதன், களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் து.செந்தில்நாதன், களுவாஞ்சிகுடி சரஷ்வதி வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டுடிருந்தனர்.
இதில் விசேட அம்சமாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், சிறுவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையினால் சிறார்களுக்கு சேமிப்பு கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்..
0 Comments:
Post a Comment