மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கிராம மக்களின் நன்மை கருதி கரடியனாறு பொலிஸாரால் ஞாயிறன்று நடாத்தப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவையில் சுமார் 100 பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தூரப்புற கிரம மக்களின் நன்மை கருதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைவாகவும் பொலிஸ்-பொதுமக்கள் உறவை வலுப்படுத்தும் விதத்திலும் இத்தகைய பொலிஸ் நடமாடும் சேவைகள் கிரமமாக நடாத்தப்படுகின்றன.
அதனடிப்படையில் உறுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நடாத்தப்பட்ட சேவையில் மிக முக்கியமாக அசாதாரண சூழ்நிலை நிலவிய கடந்த காலத்தில் தமது உடமைகளை இழந்தவர்கள், தோட்டங்கள் அழிவடைந்தவர்கள் ஆகியோரும் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொண்டார்கள்.
இதேவேளை அடையாள அட்டை தொலைந்தமைக்கான முறைப்பாடுகளும், காலங்கடந்த திருமணப்பதிவுகளும் நடமாடும் சேவையில் இடம்பெற்றன. இதனுடன் பிற சேவைகளும் இடம்பெற்றன. கிராம மக்களிடையே காணப்பட்ட சிறு சிறு பிரச்சினைகளும் பொலிஸாரால் தீர்த்து வைக்கப்பட்டன.
ஒட்டு மொத்தமாக சுமார் 100 பொது மக்கள் நடமாடும் சேவையில் தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
கரடியனாறு பொலிஸாரின் அடுத்த நடமாடும் சேவை அடுத்த இரண்டு மாதங்களில் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புலையவெளி கிராமத்தில் நடாத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
0 Comments:
Post a Comment