உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சனிக்கிழமை (10) காலை 7 மணி முதல் வாக்கெடுப்புக்கள் வாக்களிப்பு நிலையங்களிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (09) எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கும், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 380,327 போர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதுடன், வேட்பு மனுக்கள் இறுதியாக கடந்த 21.12.2017 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இம்மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகரசபைகள், 9 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றுவருகின்றுத.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 வேட்பு மனுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இதில் 79 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இம்மாவட்டத்திலுள்ள 144 வட்டாரத்திலிருந்து 146 போரும், விகிதாசார முறையில் 92 பேருமாக மொத்தம் 238 போர் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காகவேண்டி 901 பெண் வேட்பாள்கள் உட்பட மொத்தம் 2746 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.
144 வட்டாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில் இதில் 120 வட்டாரங்களுக்குரிய தேர்தல் கொத்தணி அடிப்படையிலும், 24 வட்டாரங்களுக்கான தேர்தல் அந்தந்த வாக்குச் சாவடிகளிலும், எண்ணப்படவுள்ளன.
மட்டு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 4437 உத்தியோகஸ்த்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment