10 Feb 2018

ரி.எம்.வி.பி வேட்பாளரின் வாகனம் தீக்கிரை

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி )சார்பில் களுதாவளை வடக்கு வட்டாரத்தில் விகிதாசார முறையில் போட்டியிடும் குணராசா ஜெகதீஸ்வரன் என்பரின் வட்டா ரக லொறி வாகனமே இவ்வாறு தீக்கிராயாக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (10) அதிகாலை சுமார் 2.30 மணியளளவ்வில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்னாலுள்ள வீதியருகில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலே இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் பின்னால் வைக்கப்பட்டிருந்த ரயரை எடுத்து வாகனத்தின் மேல் போட்டு எரித்து விட்டு இனந்தெரியாத நபர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் சென்றுள்ளனர்.

அதிகாலை வேளையில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது, அயலவர்கள் உடவே வெளியில் வந்து பார்தபோது புகை மண்டலம்போல் காட்சியழித்திருந்தது, பின்னத்தார்ன வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் எரிந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் அயலவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் வாகனத்தின் உட்பாகங்கள் அனைத்தும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. 

சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.குணவர்த்தன உள்ளிட்ட குழுவினர் நிலமையினைப் பார்வையிட்ட தோடு மேலதிக விசாணைகளையும் முன்நெடுத்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: