களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் 70 ஆவது சுதந்திர நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(4.2.2018) காலை 9.00 மணியளவில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன் தலைமையில் நடைபெற்றது.
முதலில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன் தேசியகொடியை ஏற்றிவைத்தார். இதன்போது இறையாண்மை மிக்க நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற சுதந்திரவீரர்களுக்கு அகவணக்கம் செய்யப்பட்டது.
அர்த்தபுஸ்டியான சுதந்திரதினத்தின் மகிமை,சுதந்திரதினத்தின் வாழ்த்துச்செய்தியையும் தெரிவித்தார். சுதந்திரதினத்தை சிறப்பிக்குமுகமாக பிரதேச வளாகத்தில் பழமரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்தர் வீ.தவேந்திரன்,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராசா,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வே.வரதராஜன்,உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
0 Comments:
Post a Comment