5 Feb 2018

சுதந்திரதின அறிவுறுத்தலை மீறிய வியாபாரிகள்

SHARE
பிரதேச சபையினால் வழங்கப்பட்டிருந்த சுதந்திரதின அறிவுறுத்தலை மீறி களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் சுதந்திர தினமான ஞாயிற்றுக் கிழமை (04) அன்று மீன் வியாபாரம் நடைபெற்றதனை அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் 70 சுதந்திர தினத்தை முன்னிட்டு மீன்கடை, இறைச்சிக்கடை, மதுபான விற்பனை நிலையங்களை அனைத்தும் மூடுமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையினால் அறிவுறுத்தல் ஓட்டப்பட்டிருந்தது. அதனை மீறி களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் மீன் வியாபாரத்தினை மேற்கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிலையில் இம்முறை எமக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் இறைச்சி கடைகள், மீன் கடைகள், மதுபான விற்பனை நிலையங்களை சுதந்திரதினத்தன்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை மீறி களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் வியாபாரம் இடம்பெற்றதாக நான் அறிந்து அதனை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் கே.லட்சுமிகாந்தன் தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: