பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் தேவை என மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10 ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஊடகவியலாளரும் சமூக சேவகருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசடி வட்டாரத்தில் உள்ள கோட்டைமுனை, அரசடி, தாமரைக்கேணி மக்களுடனான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை 04.02.2018 நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவர் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் இன மத மொழி மற்றும் கட்சி அரசியல் பேதம் கடந்த சேவகர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
செயற்திறனும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களை ஒவ்வோரு வட்டாரத்திலும் மக்கள் தெரிவு செய்வதன் மூலம் பிரதேச அபிவிருத்திகளை இலகுவாகச் செய்ய முடியும்
புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு ஏற்படும்போது மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்கள் பகிரப்படும்.
இதன் மூலம் எமது பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செயற்படுத்த முடியும். மாகாணசபை, வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதிகளைப் பெறவும் அத்தோடு பிரதேச மக்களின் நலன்சார்ந்த விடயங்களுக்காக வரிகளில் மாற்றீடும் புதிய வரி அறிமுகத்தையும் செய்யலாம்.
20 வட்டாரங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் அரசடி வட்டாரமானது ஏனைய 19 வட்டாரங்களை விட இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய வட்டாரமாகத் திகழ்கின்றது.
பன்மைத்துவக் கலாசாரம் உள்ள இந்த வட்டாரத்தில் மதத்தை பின்பற்றிய மானிடர்களின் வாழ்கையானது மேன்மையானது அதனடிப்படையில் எமது வட்டாரத்தில் இந்து ஆலயங்கள், மங்களராமய விகாரை, சென் செபஸ்தியார் தேவாலம், மற்றும் யூஸ{பியா பள்ளிவாசல் ஆகிய மதத் தலங்கள் அமையப்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இத்தேர்தலானது மக்களின் செல்வாக்கும் ஆதரவும் தலைமைத்துவமும் யாரிடம் உள்ளது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டவுள்ளது.
எமக்கு எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளவர்கள் எமது செயற்பாட்டைப் பலவீனப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக மக்களைப் பயன்படுத்தவுள்ளார்கள் நீங்கள் நிதானமாக சிந்தித்து வாக்களியுங்கள், தற்போது எமது தலைமையானது உரிமைகளைப் பெறுவதுடன் அபிவிருத்தி அரசியலும் செய்ய வேண்டும் என்பதற்காக தேசிய அரசுடன் இணைந்து செயலாற்றுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தைக் குறைத்தால் சர்வதேசம் எம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்பட்டு அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.
இந்தத் தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் இன விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போராளிகளும் தலைமைத்துவத்தைப் பெறவுள்ளார்கள்.
எனவே நாம் பிளவுபட்டு எதிரிகளுக்கு இடங்கொடுக்காமல் சிந்தித்து வாக்களித்து சிறந்த செயற்திறன், ஊழல் மற்றும் ஊதாரித்தனம் அற்றதும் மற்றும் ஆழுமைமிக்கவர்களைத் தெரிவு செய்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment