கடந்த கால விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்தேசியக்கூட்டமைப்பினது அரசியல் பயணத்திற்கும் தோள்கொடுத்த கிராமம் துறைநீலாவணை ஆகும். இந்தமண்ணில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வரலாறுகாணாத வெற்றியடை செய்து மாற்றுக் கட்சிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் துறைநீலாவணை வட்டாரத்திற்கான வேட்பாளர் க.சரவணமுத்து தெரிவித்தார்.
துறைநீலாவணையில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் சனிக்கிழமை(6.1.2018) மாலை 4.00மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களினது உரிiயினை வென்றெடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துகொண்டு இருக்கின்றது. இதற்கு நாம் அனைவரும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும்.
கடந்த காலங்களில் நடைபெற்றதேர்தல்களில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் ; அதிகமாக இருந்தது. இன்று அந்நிலை மாறி ஜனநாயகமான தேர்தல் நடைபெற இருக்கின்றது .
இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச்செய்து தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இருக்கின்றனர் என்ற செய்தியை வெளிப்படுத்த வேண்டிவர்களாக நாம் இருக்கின்றோம்.
துறைநீலாவணைக் கிராமமானது கடந்த கால தேர்தல்களில் இந்த மண்ணில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக எந்த அரசியல் தலைமைகளையும் அனுப்பவும் இல்லை.அத்த நிலையை யாரும் எமது மக்களுக்கு ஏற்படுத்தித் தரவும் இல்லை எமது மக்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஏனையவர்களுக்கு வாக்களித்தே வெற்றியடையச்செய்து வந்தமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குத்தெரியும்.
இன்றுதான் அதற்கான களம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.
அன்று துறைநீலாவணை சேனைக்குடியிருப்பு நற்பட்டிமுனை கிராமங்கள் இணைந்து கரவாகு வடக்கு என இருந்தது.பின்பு கல்லாறு -4 வட்டாரமாகவும் துறைநீலாவணை 4 வட்டாரமாகவும் இருந்ததில் எமது கிராமத்தவர்கள் தலைவராக இருந்தனர்.அதன் பின்புதான் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை உருவாக்கப்பட்டது.
இப்பிரதேச சபை மூலம் எமது கிராமத்திற்கு சரியான அபிவிருத்தி நடைபெறமால் இருக்கின்றது. கடந்த தேர்தல் விகிதாசார முறைப்படி நடைபெற்றது அதில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
இன்று அவ்வாறான சிக்கல் எதுவும் இல்லை.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வட்டார மறையில் 12 உறுப்பினர்களும் விகிதாசாரத்தின் படி 8 உறுப்பினர்களும் தெரிவாக உள்ளனர் இத்தத் தேர்தலில் சட்டத்திற்கு முரணாக எதனையும் செய்யமுடியாது. சட்டம் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றது எமது ஆதரவாளர்கள் அனைவரும் சட்டத்தை மதித்து எமது தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது.
முன்பு நடைபெற்று முடிந்த பாராளுமன்றம் மாகாணசபைத் தேர்தல்களில் 60 வீதத்திற்குக் குறைவான மக்களே வாக்களித்து இருக்கின்றனர்.இதனை மாற்றி எமது மக்கள் அதிகமாக வாக்களிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மண்முனைத் தென் எருவில் பற்று பிரதச சபைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று விகிதாசாரத்தின் மூலம் பெற இருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையினையும் அதிகரிக்கச் செய்யமுடியும் என்றார்.
0 Comments:
Post a Comment