மட்டக்களப்பு மாநகர சபையின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தின் வேட்பாளர் அந்தோனி கிருரஜன் அவர்களின் பணிமனை திறப்பு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் 03ம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன், பொது சுகாதார பரிசோதகர் மனோகரன், முன்னாள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விகிதாசார அடிப்படையில் போட்டியிடும் திருமதி லக்சலாதேவி, கமலரூபன் மற்றும் திருமதி சிந்துஜா ஆகியோருடன் வட்டார பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பணிமனை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன் அலுவலக முன்றலில் ஒன்றுகூடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment