8 Jan 2018

நம் இனத்தவர்களைக் கொண்டு நமது இனத்தின் வாக்குக்ளைச் சூறையாடப் பார்க்கின்றார்கள் - வினோ

SHARE
நம் இனத்தவர்களைக் கொண்டு நமது இனத்தின் வாக்குக்களைச் சூறையாட நினைக்கின்றார்கள். இதனை நாம் பார்வையாளர்களாக இருந்து கொண்டு பார்த்திருக்க முடியாது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மூலம் நமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் போட்டியிடும் மேகசுந்தரம் வினோறாஜ் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்வசிகுடி சூரையடிப் பகுதியில் திங்கட் கிழமை (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர்மேலும் குறிப்பிடுகையில்….

தமிழினம் இந்த நாட்டில் பல சரித்திரங்களைப் படைத்த இனைமாகும், கல்வி, கலை, கலாசாரம், வீரம், போன்ற பல விடையங்களில் முன்னேறி நின்ற இனமாகும். மன்னராட்சிக் காலத்தில் இந்து நாட்டை நிருவகிப்பதற்கு தமிழினம் மிகவும் ஊன்றுகோலாக இருந்து வந்துள்ளது. இது வரலாறாகும். இதனை யாரும் அழிக்க முடியாது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில தேசிய கட்சிகளிலுள்ளவர்களும், ஏனைய சில கட்சிகளிலுள்ளவர்களும், நமது இனத்திலுள்ள ஒரு சிலரைப் பயன்படுத்தி நமது இனைத்தின் வாக்குக்களை சூறையாடுகின்ற நிலை வந்துள்ளது இதனை நாம் இப்படியே விட்டுவிடக் கூடாது.

எங்கிருந்தோ வந்தவர்கள் இங்குள்ள நமது மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி நம் மக்களின் வாக்குக்களைச் சூறையாட நிலைப்பதென்பது ஜீரணிக்க முடியாததொன்றாகும். அவ்வாறான விடையங்களுக்கு நாமது உறவுகளும் துணைபோகக் கூடாது.

இலங்கையிலே இருக்கின்ற தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் வாக்குக்களைக் கேட்டுவருவது அவர்களின் செயற்பாடுகளாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாங்கள் யாரும் துணைபோக்ககூடாது. 

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு பேரினவாதக் கட்சிகளிலுள்ள எமது இனத்தவர்களும் சேர்ந்து முயற்சிப்பதென்பது மலையைப் பார்த்து நாய் குறைப்பது போன்றதாகும்.  

எனவே களுவாஞ்சிகுடி வட்டாரத்திலுள்ள எனது அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்திலில் வீட்டுச் சின்நத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: