மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் உள்ள வீடு ஒன்றில் 35 பவுண்கள் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே திங்கட்கிழமை 08.01.2018 அதிகாலை வேளையில் இத்திருட்டுச் இடம்பெற்றுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இரு பெண்கள் மாத்திரம் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடன் குறித்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment