30 Jan 2018

கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தரை, இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம்

SHARE
மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் தாதி  உத்தியோகத்தரை, இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம்  திங்கட்கிழமை (29) இரவு 7.55மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  திங்கட்கிழமை (29) இரவு வைத்தியசாலைக்கு விபத்தில் காயமடைந்த ஒருவரை அனுமதிப்பதற்காக பலர் வருகைதந்திருந்த நிலையில், அவர்களுள் இருவர் வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை தாக்கி கழுத்தை நசித்துள்ளதுடன், வைத்தியரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: