ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோர் புதன்கிழமை பிற்பகல் 31.01.2018 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பி.ப. 4 மணிக்கு ஜனாதிபதி காத்தான்குடிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் சிறப்பு மிக்கதாகவும் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாகவும் வரலாற்றில் பதிவாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவை மீண்டும் நிருபிக்கின்ற வகையில் காத்தான்குடி கூட்டம் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு நகர தனியார் பஸ் நிலைய முன்றலில் இடம்பெறும் உள்ளுராட்சித் தேர்தல் சம்பந்தமான பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதித் தினமான 31ஆம் திகதி நாட்டின் உயர் தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெறவுள்ள தத்தமது கட்சிகளின் உள்ளுராட்சித் தேர்தலுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தருவதால் ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷhர்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment