30 Jan 2018

மகிழடித்தீவு வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் : பாதுகாப்பு வழங்கினாலே சேவைகள் நடைபெறும் - ஊழியர்கள் தெரிவிப்பு

SHARE
மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியசேவைகள் செவ்வாயக்கிழமை (30) ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோயாளர்கள் திரும்பி சென்றதுடன், வெளிநோயாளர் பிரிவும் வெறிச்சோடி காணப்பட்டது.
குறித்த வைத்தியசாலையில், கடமையிலிருந்த வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தரை வைத்தியசாலையில் வைத்து இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம் திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்றது.

இச்சம்பவத்தினை அடுத்து, செவ்வாய்க்கிழமை  வைத்தியசாலைக்கு வைத்தியசாலையின் ஊழியர்கள் சமூகம் கொடுக்காததினால் வைத்தியசாலையின் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. 

இதுதொடர்பில் ஊழியர்களிடம் வினாவியபோது, தமக்கும் குறித்த வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சேவைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதினால், தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வரை கடமையில் ஈடுபடப்போவதில்லையெனக் குறிப்பிட்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: