25 Dec 2017

பட்டிருப்புத் தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் - அமைப்பாளர் தவானசூரியம்

SHARE
பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 3 பிரதேச சபைகளையும் இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றி ஆட்சியமைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இப்பகுதியை ஒரு எழுச்சிமிக்கதாக மாற்றி இளைஞர் சமுதாயத்தின் கையில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அயல் பிரதேசங்களைவிட அதிகம் சிறப்பு வாய்ந்த பிரதேசமாக விளங்க வேண்டும் என்பதுதான் எமது அபிலசகளாகவுள்ளது. இதனை மக்களுக்க விளங்கப்படுத்தியுள்ளோம் மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பட்டிருப்புத் தொகுதியை மிகுந்த அபிவிருத்தி செய்யவேண்டும் என நோக்ககம் கொண்டுள்ளார்.
என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இளையதம்பி தவஞானசூரியம் தெரிவித்துள்ளார். பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று, மற்றும் மண்முனை தென்மேற்கு ஆகிய உள்ளுராட்சிமன்ற வேபட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எருவிலில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதாகத்தான் மக்களும் நம்பியிருந்தார்கள். அதைத்தான் நாங்களும் நம்பி அவர்ளுடன் பயணித்தோம், ஆணால் அண்மைக்காலத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்களுக்கு விமோசனம் கொடுக்கும் செயற்பாடுகளாகத் தெரியவில்லை இதனால் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் வெறுப்புணர்வுகள் தோற்றியுள்ளன. 

இவற்றினை நாம் விடுத்து தற்போதைய நிலையில் எமது மக்களின் வாழ்க்கைத் தரைத்தை உயர்த்த வேண்டிய விதத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் என்னை ஜனாதிபதி அவர்கள் பட்டிருப்புத் தொகுதிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமித்திருப்பதை இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்கள். இப்பதவியை வைத்துக் கொண்டு என்னாலான அனைத்து செயற்பாடுகளையும் இப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளேன்.

கடந்த காலத்திலிருந்து வந்த அரசியல்வாதியக் அனைவரும் எமக்கு எதுவும் செய்யவில்லை, அனைத்து அரசியல்வாதிகளும் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் எம்மிடம் பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்கள் முறையிடுகின்றார்கள். 

இவற்றையால்லாம் எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உணர்ந்து பட்டிருப்புத் தொகுதியை மிகுந்த அபிவிருத்தி செய்யவேண்டும் என நோக்ககம் கொண்டுள்ளார். அந்த வகையில் குருமண்வெளி – மண்டுர் பாலம் நிருமாணப்பது, இத்தாகுதியிலுள்ள அனைத்து வீதிகளையும் செப்பனிடுவது, மேலம் புதிய பாலங்கள் அமைப்பது, வீடமைப்புத்திட்டங்களை அமைப்பது, குடிநீர் வசதிகளை எற்படுத்திக் கொடுத்தல், விவசாயத்துறையை மேம்படுத்தல், குளங்களைப் பணருத்தாணம் செய்தல், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிசோலை, மண்டூ, பாலையடிவட்டை போன்ற இடங்களிலில் தகுந்த சுகாதார சேவைகளை மேற்படுத்துதல், போன்ற பல செயற்றிட்டங்களையும் இப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளோம்.

எமக்கு இத்தொகுதியில் கிடைக்கப்பெறும் பெரும் வெற்றிகளைக் கொண்டு எமது கட்சியினூடாக மேலும் பல செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கமைவாக இந்த தொகுதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்லுக்காக வேண்டி 61 அபேட்சகர்களை நிறுத்தியுள்ளோம். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: