25 Dec 2017

நாங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்து காட்டிவிட்டுத்தான் தேர்தலுக்கு வந்துள்ளோம் -கருணா

SHARE
தமிழ் மக்களுக்கு பாரிய அபிவித்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக திங்கட் கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
   
நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றோம். இந்த தேர்தலில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உரவாக்குவதற்கான அடி அத்திவாரமாகக் கொண்டு போட்டியிடுகின்றோம்.  இந்த விடயத்தை கிழக்கு மாகாண மக்கள் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். 
    
காரணம் கிழக்கு மாகாணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் 11 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தும் தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதற்கு இயலாமல் போய் 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கரசிக்கு முதலமைச்சர் பதவியினை தாரைவார்து கொடுத்திருந்தனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் 4 வருடங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு முஸ்லிம் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளன. தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை 11 உறுப்பினர்களும் மாகாண சபையில் நித்திரை கொன்றுவிட்டு வந்துள்ளனர். இந்தகைய நிலையை மீண்டும் உருவாக்க இடமளிக்க கூடாது.

மீண்டும் கிழக்கு மாகாணத்தை குழப்பபவுதற்கு இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கு ரீதியாக பரந்துபட்டளவில் கிழக்கு தலமையை உள்ளடக்கியதாக போட்டியிட்டு வருகின்றோம். எனவே எமது கொள்கையும் வடக்கு கிழக்கு இணைப்புத்தான் ஆனால் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எமது கட்சி குறியாக இருக்கின்றது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தேசியம் பேசிப்பேசி எமது மக்களை ஏமாற்றி வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் முஸ்லிம் தலைவர்களின் ஆதிக்கமும் ஏகாதிபத்திய குணமும் கூடிக் கொண்டு வருகின்றது. 
  
உதாரணமாக அமைச்சர் ஹிஸ்புல்லர் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றத்தில் போசுகின்றார், மாறாக ஹக்கிம் பேசுகின்றார் 7 ஆசனங்களைப்பெற்று கிழக்கு மாகாணத்தை ஆட்டிப்படைந்துள்ளோம் என்று, அதே நேரத்தில் ஹிஸ்புல்ல இன்னொன்றை பேசினார் ஓட்டமாவடியில் இருந்த இந்து கோயிலை உடைத்து பள்ளிவாசல் கட்டியதாக கூறியிருக்கின்றார். இதையெல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது. இவ்வாறு அவர்கள் ஏகாதிபத்தியத்துடன் பேசுவதற்கும் செயற்படுவதற்கும் காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். இவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு இவற்றையெல்லாம் அனுமதித்துக்கொண்டு எதிர்த்து குரல்கொடுக்காமல் உள்ளனர் இவர்கள்; அபிவிருத்தியும் செய்யவில்லை தமிழத்தேசியத்தையும் வெல்லவில்லை எமது மக்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல்கொடுக்க முடியாதென்றால் பாராளுமன்றத்தில் இருந்து என்ன பிரயோசனம். 

இதேபாணியில்தான் இன்று சிங்கள கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் போட்டியிடுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிப்பதென்பது அமீரலியை பலப்படுத்துவதற்கு அளிக்கும் வாக்காகத்தான்  அமையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பது சிங்கள துவேசம் பிடித்த கட்சியாகும் அதில் நானும் பதவி வகித்திருந்தேன் ஆனால் அக்கட்சி சார்பாக ஒருபோதும் நான் வாக்கு கேட்கவில்லை ஆகவே இவ்வாறான கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணித்து எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும்.

அதே நேரம் இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் போட்டியிடுகின்றது. அக்கட்சியினைப் போறுத்தளவில் கருணாம்மானின் படத்தை ஒட்டி கருணாம்மானுக்கு சார்பாகத்தான் போட்டியிடுகின்றோம் என்று கூறி வெற்றி பெற்றிருந்தனர். இந்த காலகட்டத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன் இதனால் நடந்தது ஒன்றுமில்லை ஆனால் நாங்கள் தற்பொழுது தனிக்கட்சி அமைத்து தற்போது இத்தேர்தலில் போட்யிடுகின்றோம். தமிழ் மக்கள் இந்த தேர்தலை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். 
   

நாங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்து காட்டிவிட்டுத்தான் தேர்தலுக்கு வந்துள்ளோம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று எதனையும் செய்யாமல் மக்கள் முன்வரவில்லை மட்டக்களப்பினை பொறுத்தளவில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், குடிநீர், மின்சாரம் போன்றவற்றிறல் நிறைய தேவைகளை நான் நிறைவேற்றியுள்ளேன் களுவாஞ்சிகுடியில் பாரிய வைத்தியசாலையை அமைப்பத்துள்ளேன், அதே போன்று மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைத்துள்ளேன், பலதரப்பட்ட குளங்களை புனரமைத்துள்ளேன், இருளில் மூள்கியிருந்த படுவான்கரை பிரதேசத்திற்கு மூலைமுடுக்கெல்லாம் மின்சாரம் வழங்கியுள்ளேன், மட்டக்களப்பில் 6 பாடசாலைகளை தரமுயர்தி தொழிநுட்ப பிரிவை பெற்றுக் கொடுத்துள்ளேன், மண்முனை பாலத்தினை அமைத்துக் கொடுத்துள்ளேன், 3500 க்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்களைப்பெற்று எனது கையால் அந்த நியமனங்களை வழங்கியுள்ளேன். குடிநீர் வழங்கியுள்ளேன்.  இது போன்று பாரிய அபிவிருத்தியை செய்துவிட்டுத்தான் நான் மக்கள் முன்னிலையில் நாங்கள் தனிக்கட்சி அமைத்து தேர்தலில் இறங்கி வாக்கு கேட்டு வருகின்றோம். 
  
முன்னாள் போராளிகள், கணவனை இழந்த குடும்பங்கள், சுயதொழிலற்றவர்கள் போன்றோரின் எதிர்காலத்தினை உள்ளடக்கியதாகவே இக்கட்சியினை அமைத்துள்ளோம். இவற்றினை எமது மக்கள் கருத்தில் எடுத்து செயற்படவேண்டும். உண்மையில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சாதி, குடிவளி, குடும்பம் என்ற அடிப்படையில் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. இதனை மக்கள் கருத்தில் எடுக்க வேண்டாம். உண்மை நிலையினை அறிந்து கொள்ளுங்கள் இத்தேர்தலில் தேசியம் என்ற கதைக்கு இடமமில்லை   இதனால் எதிர்காலத்தில் ஒன்றும் நடக்கப் போவதில்லை யதார்த்தத்தினை கருதிலெடுத்து கலத்தின் தேவைக்கேற்ப நங்கள் எமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு  வழிசமைக்க வேண்டும் இதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம்.

இல்லாத விடத்து உதாரணமாக வாழைச்சேனை பிரதேச சபையில் இருந்த தமிழ் மக்களுக்குரிய 50 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு ஏறாவூர் பிரதேச சபை கட்டிடத்தை கட்டியுள்ளனர். வழைச்சேனை பிரதேச சபையை அண்டிய பிரதேசங்கள் அடிப்படை வதியற்று இருட்டில் மூள்கிடக்கதக்கதாக இப்பணத்தினை பெற்றுள்ளனர். இதனை எவரும் தடுக்கவில்லை இது கிழக்கு முதலமைச்சரின் வேலையாகும். அப்பிரதேசத்தினைச் சேர்ந்த பாராளுமன்னற உறுப்பினரும் இது சம்பந்தமாக வாய்திறக்கவில்லை இவர்கள் முதலைமைச்சரின் அடிவருடிகளாக மாறியுள்ளனர். 
  
மேலும் கிழக்கு மாகாண சபையூடாக கொணடுக்க்பட்ட வேலைவாய்ப்பில் விவசாய அமைச்சர் துiராஜசிங்கம் அவர்கள் பணத்தனை வாங்கி முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார் இதனை நீங்கள் வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கொண்டுவரவேண்டும், இதுவே இன்றைய மட்டக்களப்பின் நிலைப்பாடாகும் எனவே எமது கட்சியானது இவற்றிக்கு அப்பால் செயற்படும் நாங்கள் மக்களின் நலனினை கருத்திலெடுத்து நிற்சயமாக செயற்படுவோம். இவற்றினை உணர்ந்து வாக்களித்தால் இந்த நிலையை நாங்கள் மாற்றியமைக்க முடியும் இல்லாவிட்டால் மேற்கூறிய நிலையே எமக்கு உருவாகும். எனவே வருகின்ற இத்தேர்தலில் எமது கட்சியை நீங்கள் பலப்படுத்த வேண்டும் இதுவே காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: