குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம்
கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பம்.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் பதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை (09.03.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபன் அவர்களாரல் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.
குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள்; சம்பந்தமான வழக்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கிலே பாரியதொரு திருப்புமணியும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கின்றோம். இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வு பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணம் வருவதற்கு சில காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும், ஒரு தடையான காரணமாக இருந்தது.
அதனடிப்படையில் இப்பொழுது காலநிலை சரியாக
இருக்கின்ற நேரத்தில் அதற்கான பணமும் ஒதுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலே
அதற்கு செலவழிக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் இந்த
வழக்கு களுவாஞ்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு எதிர்வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் திகதி அகழ்வு
நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதமானவர்கள் ஆக்கிஇருக்கின்றார்.
இதுசம்பந்தமான சட்டவைத்திய அதிகாரிகள் அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி அவர்களால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே எதிர்வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் திகதி யிலிருந்து முதல் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. என்கின்ற ஒரு செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அதனடிப்படையிலேயே எதிர்வருகின்ற 30 ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டு ஒரு சம்பந்தமான விடயத்திற்க்கான அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காக களுவாஞ்சிகுடியினுடைய பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அது சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்கு முந்திய தினங்களில் இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அகழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30 ஆம் திகதி இந்த அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.
இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியிலே அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதனை நீதிமன்றங்கள் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் மேலும் இதன்போது தெரிவித்தார்.



0 Comments:
Post a Comment