20 Dec 2017

மாணவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சகவாழ்விற்கு ஆரோக்கியமானது. தவிசாளர் இரா.சாணக்கியன்

SHARE
மாணவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சகவாழ்விற்கு ஆரோக்கியமாக  அமையும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு ஒளிவிழாவிற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
இன ஐக்கியமும், நல்லிணக்கமும் எமது சகவாழ்விற்கு இன்றியமையாதது என்பதிலே நாம் தெளிவாக இருக்கவேண்டும். மாணவர்களிடையே இவ்வாறான பண்புகளை வளர்த்தெடுக்க மதம் சார்ந்த பண்டிகைகளை பாடசாலைகளில் கொண்டாடுவதனூடாக மாணவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தலாம். எனவும்
இவ்வாறு பாடசாலைகளினூடாகவே இந்த நாட்டின் ஒற்றுமையை வளர்த்தெடுக்கலாம்.

இங்கு ஏற்படும் நட்பினூடாகவே எதிர்கால ஒற்றுமையான சமுதாயத்தை கட்டியெழுப்பலாம். பாடசாலையில் எந்தவிதமான பாகுபாடுமின்றி மாணவர்கள் பழகும் போது அந்த நட்பு எதிர்காலத்தில் இன, மத வேறுபாடுகளின்றிய சமுதாயமும் உருவாகுவது திண்ணம் இவ்வாறான பண்டிகைகளினூடாக ஒற்றுமையையும் மேம்படுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களை பாடசாலை நிர்வாகங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: