21 Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் இனமுறுகல் உருவாக்கப்படும் சூழ்நிலைகளை சர்வமதப் பேரவை உன்னிப்பாகக் கவனித்து செயலாற்ற வேண்டும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா

SHARE
உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற முன்பாகவும் தேர்தல் சமயத்திலும் தேர்தல் முடிவுற்ற பின்னரும் பிரதேசத்தில் இனமுறுகல் உருவாக்கப்படும் சூழ்நிலைகளை மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷாந்த்ரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்காக இந்த வேண்டுகோளை வியாழக்கிழமை 21.12.2017 அவர் முன் வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களுக்கு புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக தெளிவூட்டும்  Thematic Discussion on the Ongoing Constitutional Reform Process  கருத்தரங்கு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதி;யில் இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்குமிடையிலான கலந்துரையாடல் “Dialogue on constitutional reform process in Sri Lanka for District Inter Religious Committee(DIRC) members in Batticaloa under the project of “Inter-faith and inter-ethnic dialogue in Sri Lanka”. எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் வளவாளராகக் கலந்து கொண்டு கடந்த கால இன முறுகல் சம்பவங்கள், சமகால உள்ளுராட்சித் தேர்தல் முன்னெடுப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் மாவட்ட சர்வ மதப் பேரவை ஆற்றவுள்ள பணிகள் குறித்து கருத்தப் பகிரும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆற்றக்கூடிய இன நல்லிணக்க முயற்சிகள் குறித்து அங்கு மேலும்  தெரிவித்த அவர்,
சமூக, இன ஐக்கியத்தையும் சகல சமூகங்களினதும் இயல்பு வாழ்க்கையையும் குழப்பும் எந்தவொரு முன்னெடுப்புக்களையும் பிரதேசத்திலுள்ள மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கும் வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துள்ள  ஆசிய மன்றம், பிரிட்டிஷ் கவுன்ஸில் என்பன இனமுறுகலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான அக்கபூர்வ முயற்சிகளில் அதிக அக்கறை கொண்டுள்ளன.
சமீபத்தில் வாழைச்சேனையில் ஒரு பஸ் நிலையம் அமைப்பதில் உருவாக்கப்பட்ட இன முறுகல் ஒட்டு மொத்த மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையையே ஆட்;டங்காணச் செய்யுமளவிற்கு வியாபித்திருந்தது.
இத்தகைய சூழ்நிலைகளை எந்தத் தரப்பினர் தோற்றுவித்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை அடுத்த கணப்பொழுதே நிலைநாட்டுவதற்கும் ஏற்ற ஒழுங்குகளுக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய சமாதானப் பேரவை விரைந்து பணியாற்றும்.
இனப்பூசலை வளர்க்கும் எந்தவொரு சூழ்நிலைகளையும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றை எல்லாத் தரப்பினரோடும் இணைந்து தடுப்பதில் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத உறுப்பினர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: