விசேட தேவையுடையோர்களை சமூகப் பிரஜையாக மதித்து அவர்களை எம்மோடு சேர்த்து கொண்டுபோக வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் நிலையத்தினரின் நத்தார் பண்டிகை நிகழ்வுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
விசேடதேவையோடையோர் எமது சமூகத்தினரினால் ஒதுக்கி நடாத்தப்படுகின்றமையை நாங்கள் அறிவோம். அவ்வாறில்லாமல் அவர்களும் எமது சமூக அந்தஸ்துள்ள பிரஜையாக நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்களையும் நாம் பங்குபெறும் அனைத்து விடயங்களிலும் கலந்துகொள்ளச் செய்வதனூடாக சமூகத்தினுள் கொண்டுவரலாம். அவர்களுக்கு மதிப்பளிக்ககாமல் நடந்து கொள்வது, ஒதுக்கி நடப்பது இவ்வாறான செயல்களை நாம் மறந்து சமூகப்பிரஜையாக அவர்களை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் இணைப்பாளரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment