மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இரு வேறு இடங்களில் இரண்டு விபத்துக்கள் இன்று புதன் கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வாழைக்குலைகளை ஏற்றிச் சென்ற வட்டாரக வாகனம் ஒன்று காலை வேளையில் மின்கம்பத்தல் மோதியத்தியுள்ளது.
கல்முனைப் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் வாகனம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.
இதேவேளை இன்றயத்தினம் மாலை புதுக்குடியிருப்பு மதுபானசலைக்கு முன்பாக மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்pயாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வீதி விபத்துக்கள் இடம் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment