இத்தேர்தலில்கட்சி, தேசியம், சுயநிர்ணயம்,உரிமை போன்றவற்றை கருத்திலெடுக்க வேண்டாம். உள்ளுராட்சி என்பது வெறுமனே எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்வதாகும். எனவேபிரதேசத்திற்கு என்ன தேவை இதனை யார் எதற்கூடாக மிக விரைவாக நிறைவேற்றுவார்கள் என்பதை பற்றியே கருத்திலெடுங்கள்.என உள்ளுராட்சி தேர்தலில் களுவாஞ்சிகுடி வட்டாரம் சார்பாக போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்யிடும் வேட்பாளர் தி.சத்தியரூபன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
தமிழ் மக்களுக்குரிய தீர்வுடன் கூடிய அபிலாசைகளையும் அபிவிருத்தியைiயும் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தற்கால அரசியல் நிலைப்பாட்டில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்புடத்த வேண்டிய தேவை உள்ளது.
இந்த நாட்டிலே தற்பொழுது ஒரு நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது. இதனை தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் உணர்ந்துள்ளனர். இந்த நாட்டில் ஒரு துவேசமற்ற ஆட்சியை நடாத்தி கொண்டு தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்ற ஒரு தலைவராக ஜனாதிபதி அவர்கள் திகழ்த்து கொண்டு இருக்கின்றார்.
இக்காலகட்டத்தில் ஜனாதிபதிளின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஆட்சியினை பலப்படுத்தவேண்டிய தேவை எமக்குள்ளது. எனவே எமதினிய மக்களே நீங்கள் இத் தேர்தலில் கட்சியை கருத்தில் கொள்ள தேவையில்லை எமது பிரதேசத்திற்கு என்ன தேவை நிறைவேற்றப்பட வேண்டும், இதனை யார் எதற்கூடாக மிக விரைவாக நிறைவேற்றுவார்கள் என்பதை பற்றியே கருத்திலெடுங்கள். இத் தேர்தலில் தேசியம்,சுயநிர்ணயம், என்ற எந்தவிதமான கருத்திற்கோ கொள்கைகளுக்கோ இடமில்லை வெறுமனே உள்ளுராட்சி என்பது எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்வதாகும்.
வேறுகட்யில் தேர்தலில் வெற்றி பெற்று அபிவிருத்திக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கையேந்துவதை விட அரசாங்க கட்சியிலே வெற்றிபெற்றால் அவற்றை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அவ்வாறு கையேந்த வேண்டி நிலையும் ஏற்படாது. எனவே களுவாஞ்சிகுடி வட்டார மக்கள் சிந்தித்து செயற்பாடவேண்டும். நாங்கள் பிறரிடம் கையேந்துவதை தவிர்க்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தலில் கை சின்னத்திற்கு வாகளிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment