26 Dec 2017

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவேந்தல்

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவேந்தல் திங்கட்கிழமை (25) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில்  அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  இலங்கைத் தரமிழரசுக் கட்சி பெதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், ச.வழயாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரகளான கோ.கருhணாகரம், நி.இந்திரகமார், மா.நடராசா அரசியல் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நல்லிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டர்.

இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: