எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக வேண்டி எல்லை நிருணயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) மாலை மட்டக்களப்பு கச்சேரியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
எல்லை நிருணயக் குழுவின் தவிசாளர் கலாநிதி கே.தவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களான எஸ்.விஜயச்சந்திரன், டீ.ஏ.பண்டாரநாயக்க, எஸ்.எச்.ஹஸ்புல்லா, பீ.எம்.சிறிவர்த்தன, மற்றும் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் எஸ்.நவேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களது முன்மாழிவுகளை மேற்படி எல்லை நிருணயக் குழுவிடம் ஒப்படைத்து விளக்கமளித்தனர்.
0 Comments:
Post a Comment