புத்த பகவானின் போதனைகளான சாந்தி சமாதான அகிம்சை போன்ற நற்போதனைகளை போதிக்கின்ற பௌத்த மத உயர் பீடத்திலிருக்கின்ற ஒருசில துறவிகளின் அண்மைய செயற்பாடும், நிலைப்பாடும். இந்நாட்டிலுள்ள அமைதியைக் குழப்பி மீண்டும் மக்களிடையே பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற செயல்களாக் அமைகின்றன. இச்செயற்பாடுகள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா (நடா) தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…..
தற்போது இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் இந்நாட்டில் ஏற்பட்ட இன்னல்கனைத் தீர்க்கும் நோக்கில் அமைதியான சூழ் நிலையை ஏற்படுத்தி எதிர் காலத்தில் எல்ல சமூக மக்களும், ஒற்றுமையாகவும், நீதியாகவும், நின்மதியாகவும், செயற்படுவதற்கு அரசியலமைப்பினூடாக உரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக நடவடிக்கைகைள எடுத்து வருகின்றது.
இவ்வாறான நல்ல சூழலைக் குழப்பும் விதமான கருத்துக்களையும் செயற்பாடுகளையும், இந்த பௌத்த துறவிகள் செய்வதென்பது முழு இலங்கையும், குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செயற்பாடாக அமைவதற்கு வழிசமைக்கின்றன.
எனவே இம்மதத் துறவிகள் குறித்த மதம் கூறுகின்ற தத்துவங்களை படித்து, அறிந்தும், மக்களுக்கு நற்போதனைகள் செய்வதை விடுத்து அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளில் மூக்கை நுளைத்து தலையீடு செய்வது அமைதியைக் குழப்பும் செயற்பாடுகளை எவ்வகையிலும், ஏற்கமுடியாது. அவர்களின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளினூடாக இவ்விலைங்கைத் தீவினில் மீண்டுமொரு பாரிய கலவரங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் முயற்சியை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுமாத்திரமின்றி நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பாரிய பிரச்சனைகளை தீ மூட்டி எரியவிடும் செயற்பாட்டிற்கான பொறுப்பினை ஏற்படுதியவர்களுக்கான அவப்பெயரினை இத்துறவிகள் பெற்றுக் கொள்வார்கள். இதனை சரித்திரம் எதிர்காலத்தில் மறக்காது. எனவே மதத்துறவிகள் நல்ல போதனைகளைப் பரப்புவதை விடுத்து நாடு நாசமாகப் போகின்ற நிலையை நிறுத்தி புத்தபகவானின் நற்சிந்தனைகளைப் பரப்பி இந்த நாட்டில் எதிர்காலத்தில் சாந்தியும் சமாதானத்தையும் ஏற்படுத்தி சகல மக்களும் சந்தோசமாகவும். சமத்துவமாகவும், ஒற்றுமையாகவும், பிரிவினைகளை மறந்து ஒரே இலங்கை மக்கள் என சிந்திக்கும் அளவிற்கு நற்போதனைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment