ஏறாவூர் சவுக்கடி கிராமத்தில் இளம் தாயும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்து ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனப் பேரணியை நடாத்தியது.
ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகை முடிந்ததும் இந்தப் பேரணி இடம்பெற்றது.
பள்ளிவாலில் இருந்து ஆரம்பமான பேரணி கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஏறாவூர் பிரதான வீதியை வந்தடைந்தது.
ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத் தலைவர் எம்.எல். அப்துல் வாஜித், செயலாளர் எஸ்.ஏ. செய்யது அஹமட் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் ஜும்மாத் தொழுகையை முடித்துக் கொண்ட பொது மக்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இக்கொடூர கொலையைப் புரிந்த பாதகர்களை சட்டம் கண்டு பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அங்கு சம்மேளத் தலைவர் வலியுறுத்தினார்.
ஏறாவூர் நகர பிரதேசத்திற்கு அருகிலுள்ள, முருகன் கோவில் வீதி, சவுக்கடி, கிராமத்தைச் சேர்ந்த மதுவந்தி என்ற 26 வயது தாயும் மதுஷன் என்ற 11 வயது மகனும் படுக்கையறையில் வைத்து உறக்கத்தில் இருந்த வேளையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயலாகும்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் சமூகப் பாதுகாப்பை கட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு சமுதாயத்தின் மீதும் கடமையாகும்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சம்மேளனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.”என்றார்.
0 Comments:
Post a Comment