6 Oct 2017

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தற்கால அரசியல் நிலமைகள் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம்.

SHARE
தற்கால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும், தற்போது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் தமது கட்சியின் பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கபடபட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசிங்கம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று கிளையின் பொதுச் சபைக்கூட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள் இராசமாணிக்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது. 

மேற்படி கட்சியின்  இண்முனை தென் எருவிப் பற்று கிளையின் தலைவர் மார்க்கண்டு நடராசாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரிநேத்திரன் மற்றும் பொதுச்சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் இறுத்தியல் ஊடகங்களுக்; கருத்து தெரிவிக்கும் போதே பொதுச்செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இந்நிலையில்  முன்னைய அரசியல் நிலமைகளைப் பாடமாகக் கற்றுக் கொண்டு எமது தலைவர் ஈடுபட்டு முழுநாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக ஆக்கி தமிழ் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அரசியலமைப்பை இன்னும் சிறந்த முறையில் செயற்படுத்தி, எமது தமிழ் மக்களுடைய அபிலாசைகளில் இப்போது அடையக்கூடிய அதி உச்ச அடைவை அடைவதற்கு எமது தலைமை செயற்பட்டுக் கொண்டிரு;ககின்றது.

இவை தொடர்பாக எமது தலைமை என்ன முடிவை எடுக்கின்றதோ அந்த முடிவை எமது மக்களுக்குப் பிரச்சாரம் செய்து வரஇருக்கின்ற மக்கள் தீர்ப்பளிப்பிலே எமது மக்களை முழுமையாக பங்குபெறச் செய்ய வேண்டும என்ற விடையங்கள் தொடர்பிலும், இவை தொடர்பான பல தெழிவுறுத்தல் கேள்வி எமது உறுப்பினர்கள் கேட்டு தெழிவடைந்துள்ளார்கள். இதன்படி இந்த விடையத்தை அனைவரும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் எமக்கு வாக்குறுதியளித்துள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  










SHARE

Author: verified_user

0 Comments: