6 Oct 2017

கபடிப்போட்டியில் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்ற மட்.கண்டுமணி ம.வி மாணவிகளுக்கு மகத்தான வரவேற்பு

SHARE
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17 வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
பாடசாலைமட்ட கபடி விளையாட்டுப் போட்டி மொறட்டுவ மகாவித்தியாலயத்தில் புதன் கிழமை நடைபெற்றது.

இறுதிப்போட்டி மட்.பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கும் பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்திற்கும் இடம்பெற்றதில் 30 – 23 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், பயிற்றுவித்த ஆசிரியர் இ.புவேந்திரகுமார்(புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகியோருக்கும் வெற்றி மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார். இப்பாடசாலை கடந்த வருடம் (2016) கபடிப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை (06) காலை மட்டக்களப்புக்கு வந்திறங்கிய மாணவிகளையும், ஆசிரிர்களையும், மட்டக்களப்பு நகரிலிருந்து கெப் வாகனத்தில் ஏற்றி மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக மேள தாள வாத்தியங்கள் முழங்க பாடசாலையை சென்றடைந்தந்தனர். வரும் வழியில் அமைந்துள்ள ஏனைய பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என பலரும் மாலைகள் சூடியும், மலர் செண்டு கொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை களுவதாளை கல்லடிப் பிள்ளiயார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட வீராங்கணைகளை அவ்விடத்தில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை;ளை உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்துத் தெவித்தித்த இந்நிலையில் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கும் வீராங்களைகள் அழைத்துச் செல்லப்பட்டு களுவதாளை மாணவர்கள், ஆசியரியர்களால் மலர் செண்டு வழங்கி  வாழ்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

















SHARE

Author: verified_user

0 Comments: