12 Oct 2017

ஓய்வு பெற்ற வலயக் கல்விப் கோட்டக் கல்விப்பணிப்பாளர் மாரடைப்பால் மரணம்

SHARE
மட்டக்களப்பு வவுணதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற சித்தாண்டியைச் சேர்ந்த சீனித்தம்பி சண்முகம் (வயது 60) என்பவர் மாரடைப்புக் காரணமாக திங்கட்கிழமை இரவு (09.10.2017) காலமாகியுள்ளார்.
ஈரலக்குளம் வயலில் வேலை செய்து கொண்டு நின்றபோது மயங்கிய அவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியிலேயே மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் காலஞ்சென்றவரின் மனைவி கந்தப்போடி யோகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: