இந்நிகழ்வில் விக்னேஸ்வரன் தொடர்ந்து பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் அதிகமான பெண்கள் தமது வீட்டு வேலைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர்.
அந்த நேரத்தில் சில மணிநேரத்தை ஒதுக்கி இவ்வாறாக சிறுகைத்தொழில்களை மேற்கொள்வார்களானால் மாதாந்தம் பொருந் தொகை ஒன்றினை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அங்கு போதிய சம்பளங்கள் இல்லாமலும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்து பணமீட்டுகின்றனர்.
சிலர் வெறுங்கையோடு பாதிக்கப்பட்டு திரும்புகின்றனர்.
இவ்வாறெல்லாம் துன்பங்களை அனுபவிக்காமல் சொந்த வீடுகளிலே, உறவுகளுடன் இருந்துகொண்டு போதிய வருமானத்தை ஈட்டக்கூடிய இதுபோன்ற கைத்தொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக்கௌள்ள வேண்டும்” என்றார்.
வவவுணதீவு பிரதேச செயலகத்திக் கீழுள்ள விதாதா வளநிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் ஒழுங்குசெய்த இந்நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று நாடுதிரும்பிய மற்றும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு, மெழுகுதிரி, சூடம் (பத்தி), காகித உறை தயாரித்தல் உள்ளிட்ட சிறு கைத்தொழில் தொடர்பாக செய்முறை மற்றும் விளக்கமளிப்பு போன்றவை வழங்கப்பட்டன.
பிரதேச விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் சுனித்தா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர்களான வளர்மதி நிரஞ்சன், சமூக சேவகர் எம். சிறிஸ்காந்தராஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. அருணா, விதாதா வள நிலைய கள இணைப்பாளர் பி. சுகுணரூபன் உள்ளிட்டோரும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment