எமது பிரதேசங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை பலப்படுத்த வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 20 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேசங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றலாம். இப்பெண்கள் பெரும்பாலானோர் நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடனை பெற்று கடனாளிகளாக இன்று பலர் எம்மத்தியில் அவஸ்தைபடுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்வதால் அக்குடும்பத்தில் உள்ள கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வித்தரம் அதிகரிக்கும். அதே போன்று அக்குடும்பத்தின் பொருளாதார நிலையும் அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கும் போது கடனுக்கு அடிமையாக வேண்டிய தேவையேற்படாது எனவும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment