31 Oct 2017

மட்டக்களப்பில் இனக் கலகத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

SHARE
மட்டக்களப்பில் இனக் கலகத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.
சமீப சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் தூண்டி விடப்பட்டுள்ள இனங்களுக்கிடையிலான விரும்பத் தகாத செயற்பாடுகள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தி சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும்  நடவடிக்கைகள் குறித்தும் ஏறாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் தெளிவுபடுத்தினார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை 31.10.2017 நண்பகல் பாதுகாப்பு அதிகாரிகளின்  இந்த தெளிவுபடுத்தல் கூட்டம்  ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்றது.
அங்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளப் பிரதிநிதிகள், ஊர்ப் பிரமுகர்கள், சமீபத்திய அசம்பாவிதங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சமகால பாதகாப்பு மற்றும் கலகத் தடுப்பு நிலைமைகளை வெளிப்படுத்திய சமன் யட்டவர@

தமிழர் பகுதிக்கு முஸ்லிம்கள் வரக்கூடாதென்றோ, முஸ்லிம்களின் பகுதிக்கு தமிழர்கள் செல்லக் கூடாதென்றோ இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் நடவடிக்கையில் எவரும் ஈடுபட்டால் அது சட்டவிரோதமானதாகும். அத்தகையவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை 31.10.2017 சந்திவெளிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதோடு மற்றும் அசம்பாவிதங்களைத் தூண்டிய நபர்களையும் கைது செய்யுமாறு நான் பொலிஸாரைப் பணித்திருக்கின்றேன்.

மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களும் பொதுமக்களின் பாதுகாப்பையும் இயல்பு வாழ்க்கையையும் பாதுகாக்கும் வண்ணம் உஷ‪hர் படுத்தப்பட்டுள்ளன.

மேற்கொண்டு எந்த வன்முறைகளும் இந்த மாவட்டத்தில் இடம்பெறாத வண்ணம் எமது பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு உன்னிப்பாக அவதானத்தில் உள்ளார்கள்.

முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் மற்றும் மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த விடயத்தில் மனம் திறந்து அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்தும் வண்ணம் பூரண ஒத்துழைப்பை நல்கி வருகின்றார்கள்.

அசம்பாவிதங்களைப் புரிவோரைப் பற்றிய விடயங்களை எம்மிடம் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையோ தீர்வைக் காண்பதையோ பொதுமக்கள் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது.
இன்று சந்திவெளியில் நடந்த சம்பவத்திற்கு பதில் நடவடிக்கையாக பாதிக்கப்பட்டோர் எதிலும் ஈடுபடாது அதனைப் பொலிஸார் பொறுப்பில் சமர்ப்பித்தது முன்னுதாரணமான விடயம்.

உணர்வுகளுக்கும், உணர்ச்சியூட்டல்களுக்கும் இடம்கொடுக்க வேண்டாம் என நான் அனைத்து சமூகத்தவர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.
அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் இயல்பு வாழ்க்கையையும் செவ்வனே உறுதிப்படுத்தும் பொறுப்பை பொலிஸார் ஏற்றுள்ளார்கள்.



SHARE

Author: verified_user

0 Comments: